×

எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது: ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்சனம்

சென்னை: எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்திலிங்கம், அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவதற்குத்தான் டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தனர். ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் சந்திப்பை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் மற்றும் தாமும் கூட்டாக முடிவெடுத்துதான் டிடிவியை சந்தித்தார். முன்னாள் முதலமைச்சர் என்ற பதவிக்கு உண்டான பண்பு இபிஎஸ்க்கு இல்லை என வைத்திலிங்கம் விமர்சனம் செய்தார்.

The post எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது: ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisami ,Chennai ,Edapadi Palanisamy ,GP S.S. ,Vidilingam ,Edabadi Palanisami ,Dinakaran ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு