×

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிப்பறைகள் சீரமைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை, மே 12: பாளை வேய்ந்தான்குளம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து காணப்பட்ட இலவச கழிப்பறைகள் சீரமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். பாளை வேய்ந்தான்குளம் பகுதியில் செயல்படும் பாரதரத்னா எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளது. இங்கிருந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு மாநகர பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், நெல்லை அரசு மருத்துவமனை, பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் வெளியூர்களுக்கு பயணம் செய்வோர் என பல்வேறு காரணங்களுக்காக தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பஸ்நிலையத்தில் ெபாதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு நடைமேடையிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே நவீன கட்டண கழிப்பறைகள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமேயுள்ள ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே இலவச கழிப்பறைகளும் முறையான பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கு வரும் பயணிகள் உள்ளிட்டோர் இலவச கழிப்பறைகளுக்கு செல்வதை தவிர்த்து அங்குள்ள நவீன கட்டண கழிப்பறைகளுக்கு செல்லும் நிலை உருவானது.

The post நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிப்பறைகள் சீரமைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nellie New Bus Station ,Nellai ,Palai Veindankulam ,station ,Nellai new bus station ,Dinakaran ,
× RELATED பண்பாடற்ற அரசியல் செய்யும் அண்ணாமலை: பாலகிருஷ்ணன் கண்டனம்