×

பெண்ணின் கழுத்தில் இருந்த 2 கிலோ தைராய்டு கட்டி அகற்றம் மதுரை சரவணா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

திருப்பரங்குன்றம், மே 12: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இந்திரா (63) என்பவர் மதுரை நரிமேடு சரவணா மருத்துவமனையில் வெளிநோயாளியாக கழுத்தில் இருந்த கட்டியை பரிசோதிக்க வந்தார். மருத்துவர்கள் அதை கண்டு அது தைராய்டு கட்டி எனவும், கடந்த 30 ஆண்டுகளாக அந்த கட்டி வளர்ந்துள்ளதையும் மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்தனர். இதை தொடர்ந்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சரவணன் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர் அந்த நோயாளியின் கழுத்தில் இருந்த சுமார் 2 கிலோ அளவிலான தைராய்டு கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை மேற்கொண்டனர். இதுகுறித்து டாக்டர் சரவணன் கூறுகையில், ‘அறியாமையில் கிராமப்புற மக்கள் இதுபோன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது. சிறு கட்டிகள் தென்படும் போதே மருத்துவரை அணுகி உடனடி தீர்வு காண வேண்டும்’ என்றார்.

The post பெண்ணின் கழுத்தில் இருந்த 2 கிலோ தைராய்டு கட்டி அகற்றம் மதுரை சரவணா மருத்துவமனை டாக்டர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Madurai Saravana Hospital ,Thiruparangunram ,Indira ,Sivagangai district ,Madurai Narimedu Saravana Hospital ,
× RELATED ஆவின் பாலகத்தை உடைத்து நெய், பால், பணம் திருட்டு