×

சமத்துவபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

திருவாடானை, மே 12: திருவாடானை அருகே சமத்துவபுரம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த ரேஷன் கடை கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழுந்து தரை மட்டமானது. அதன் பிறகு அந்த ரேஷன் கடை தற்காலிகமாக அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த அரசு பள்ளி பழைய கட்டிடத்தின் சுவர்களிலும், தளத்திலும் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளதால் தற்சமயம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஆகையால் ஏற்கனவே ரேஷன் கடை செயல்பட்டு தற்சமயம் காலியாக உள்ள இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர் மூர்த்தி கூறுகையில்: இந்த சமத்துவபுரம் பகுதியில் நீண்ட காலமாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து தரைமட்டமானது. அதனால் இந்த ரேஷன் கடை அருகிலுள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடமும் தற்சமயம் முழுமையாக சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஆகையால் ஏற்கனவே ரேஷன் கடை செயல்பட்டு தற்சமயம் காலியாக உள்ள இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனக் கூறினார்.

The post சமத்துவபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Samathuvapuram ,Thiruvadanai ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாக்களால் செண்டு பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி