×

பஸ் நிலையத்தில் ஓட்டல், தங்கும் விடுதி

இதுகுறித்து, சமையல்காரர் கூறுகையில், ‘₹50 கோடி மதிப்பில் பிரமாண்ட பஸ் நிலையம் கட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது. பஸ் நிலைய கட்டுமான பணியுடன் சேர்த்து ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி கட்ட வேண்டும். அப்படி, கட்டும் பட்சத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதனை, தனியாருக்கு கொடுக்காமல், அரசே நேரடியாக நடத்த வேண்டும். இதனால், பயணிகள் உணவுக்காக நீண்ட தூரம் அலைந்து திரியாமல் சுலபமாக சாப்பிட்டு விட்டு செல்வார்கள் என்றார்.

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
பஸ் நிலையம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் சீமை கருவேல மரங்கள் மற்றும் வேலிகத்தான் மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முதலில் சீமை கருவேல மரங்கள் மற்றும் வேலிகத்தான் மரங்களை பொக்லைன் இந்திரம் மூலம் முழுமையாக அகற்றிவிட்டு, பின்னர் பஸ் நிலைய பணிகளை தொடங்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
2010ம் ஆண்டு பஸ் நிலையம் கட்டுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, அப்போது பொதுப்பணித்துறை இடம் சிஎம்டிஏ நிர்வாகம் ஒப்படைத்தது. அதற்கான, ஒப்பந்தம் போடப்பட்டு ஒப்பந்ததாரர் பணியை ஆரம்பித்த சூழ்நிலையில், பல்வேறு காரணங்களால் அந்த பஸ் நிலையம் கட்டப்படாமலேயே அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அதற்கு ஒதுக்கிய நீதியும் ஒன்றிய பொதுப்பணித்துறை மீண்டும் சிஎம்டிஏ நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மாமல்லபுரம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மூலமாகவும், தொகுதி மக்கள் சார்பில் நானும் முன் வைத்தபோது, இதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.பஸ் நிலைய கட்டுமான பணிக்கு ₹50 நிதியை சட்ட மன்றத்திலேயே அறிவிக்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபுவுக்கும், தொகுதி மக்களின் சார்பிலும், எம்எல்ஏ என்ற அடிப்படையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

The post பஸ் நிலையத்தில் ஓட்டல், தங்கும் விடுதி appeared first on Dinakaran.

Tags : Citel ,Bus Station ,Dinakaran ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...