- அண்ணாவாசல் ஒன்றியம்
- புதுக்கோட்டை
- மாவட்ட கலெக்டர்
- கவித்த ராமு
- ரெங்கம்மல் சத்திரம்
- புதுக்கோட்டை மாவட்டம்
- தின மலர்
புதுக்கோட்டை, மே 12: புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரம் கிராமத்தில் நரிக்குறவர் சமூக பொதுமக்களை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு (நேற்று) நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ரெங்கம்மாள் சத்திரத்தில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டும் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து தரமானதாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் வெள்ளனூர் ஊராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 528 வீடுகள் கொண்ட 22 கட்டிடங்கள் ரூ.54.15 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் கவிதாராமு பணிகளை நல்லமுறையில் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் வடசேரிப்பட்டி வலையங்குளம் வரத்து வாய்க்கால் ரூ.7 லட்சத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் வடசேரிப்பட்டி கிராம அங்காடியில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், உணவுப் பொருட்களின் தரம், இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடசேரிப்பட்டியில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட கலெக்டர் தாவூத்மில் ஜலஜீவன்மிசன் திட்டத்தின்கீழ் 95 பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் கவிதா ராமு, பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை டிஆர்ஓ முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வாகன ஓட்டிகள் அவதி; அன்னவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
