×

2 ஆண்டுகளில் 1,156 பேர் கைது

வேலூர் சரக டிஜஜி முத்துசாமி பேசுகையில், ‘ வேலூர் சரகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையையொட்டி 494 பள்ளிகளில் ஆன்டி டிரக் யூனிட் தொடங்கப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் வேலூர் சரகத்தில் 4.0 வேட்டை வரையில் நடத்தப்பட்டுள்ளது. கடந்த அண்டு 643 வழக்குகள் பதிந்து 798 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டு தற்போது வரையில் 278 வழக்கு பதிந்து, 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளில் கஞ்சா வழக்கில் 1,156பேர் ைகது செய்யப்பட்டுள்ளனர், என்றார். 5 வயது சிறுவன் கூல் லிப் பயன்படுத்துகிறான் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது, ஒரு மாணவி கூறுகையில், கூல் லிப் என்ற போதை ெபாருளை 5 வயது சிறுவன் பயன்படுத்துகிறான். பெற்றோர்கள் வீட்டில் போதை உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதால் பிள்ளைகள் இதுபோல் உள்ளனர், என்றார். மற்றொரு மாணவன், போதை என்றால், கஞ்சா மட்டுமல்ல, செல்போனும் ஒரு போதையாக மாறியுள்ளது. எனவே தேவையில்லாதவற்றிற்கு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்றார்.

The post 2 ஆண்டுகளில் 1,156 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vellore Saraga ,DJ Muthusamy ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...