×

அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழி புதர்மண்டி கிடக்கும் அவலம்: பேரூராட்சி நடவடிக்கை தேவை

சின்னசேலம்: சின்ன சேலம் நகர எல்லைக்கு உட்பட்ட கூகையூர் செல்லும் சாலையின் உள்பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு சின்னசேலம் நகரை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து தினமும் காலை, மாலை, இரவு என கால நேரமில்லாமல் சாதாரண மற்றும் அவசர நோய் சிகிச்சைக்கு மக்கள் வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு செல்ல மெயின் ரோட்டில் இருந்து பிரிவு சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த சாலையில்தான் மாணவர் விடுதி, குப்பை கிடங்கு உள்ளது. கழிப்பிடம் செல்பவர்களும் இந்த வழியில்தான் நடந்து வர வேண்டும். இவ்வாறு முக்கிய நடமாட்டம் உள்ள இந்த அரசு மருத்துவமனை சாலையில் பிரிவு சாலை துவக்கம் முதல் இறுதிவரை சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் மண்டி கிடக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பாம்பு உள்ளிட்ட விஷசந்துக்கள் கடித்துவிடுமோ என ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.  ஆகையால் மக்கள் நடமாட்டம் உள்ள இந்த சாலையில் பொதுமக்கள், மாணவர்கள் நலன்கருதி சாலையின் இருபுறமும் உள்ள செடி,கொடிகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், நோயாளிகளும் எதிர்பார்க்கின்றனர். …

The post அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழி புதர்மண்டி கிடக்கும் அவலம்: பேரூராட்சி நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : Government Hospital ,Suturmundi ,Chinnaselem ,Kooghaur ,Chinna Salem ,Fresh ,Dinakaran ,
× RELATED காலி இடத்தை சுத்தம் செய்யும்போது...