×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு போல தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பீட் பேக் சிஸ்டம் விரைவில் அமலுக்கு வரும்: ஏடிஜிபி தகவல்

வேலூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் உள்ளதைப்போல தமிழ்நாடு முழுவதும் விரைவில் போலீஸ் பீட் பேக் சிஸ்டம் அமலுக்கு வரும் என்று வேலூரில் இரவு நேர இ-பீட் பணிகளை ஆய்வு செய்த ஏடிஜிபி சங்கர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரின் இரவு நேர ரோந்து பணிகளை தமிழ்நாடு காவல்துறை சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் நேற்று முன்தினம் விடிய விடிய ஆய்வு செய்தார். அப்போது, வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஏடிஜிபி சங்கர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 4.0 கஞ்சா வேட்டையை பொறுத்தவரை கடந்த கஞ்சா வேட்டையில் பிடிக்க முடியாத குற்றவாளிகளை இந்த கஞ்சா வேட்டையின்போது பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். 1.0 கஞ்சா வேட்டையின்போது இருந்த கஞ்சா புழக்கம், 4.0 கஞ்சா வேட்டையின்போது வெகுவாக குறைந்துள்ளது. இங்கு விற்பனையை தடுத்தாலும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்துவதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

எஸ்பி அலுவலகங்களில் புதன்கிழமை நடைபெறும் குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் போலீசார் விசாரணை நடத்துவார்கள். அந்த விசாரணை பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். அவர்கள் திருப்தி இல்லையென்றால் உயர் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி தீர்வு ஏற்படுத்தப்படும்.

இந்த திட்டம் போலீஸ் பீட் பேக் சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது. இதை வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தி உள்ளோம். விரைவில் தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பீட் பேக் சிஸ்டம் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு போல தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பீட் பேக் சிஸ்டம் விரைவில் அமலுக்கு வரும்: ஏடிஜிபி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kanchipuram ,Chengalpadu ,ADGB ,Vellore ,Chengalpattu ,Chengalputtu ,Pack ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு