×

தமிழ்நாட்டை பெரிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டை பெரிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டவர் தான் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா என்று மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் கூறினார். மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் கூறுகையில்: மாநில திட்டக்குழு துணைத் தலைவராக பொறுப்பேற்ற போது, அவரும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் என்னுடன் வேலை பார்த்துள்ளார். மிகவும் சிறப்பாக வேலை பார்க்கக் கூடியவர் என்று பல இடங்களில் கூறியுள்ளேன்.

எந்த கூட்டமாக இருந்தாலும் சீரியசாக எடுத்துக் கொள்வார். ஒரு தொழிலதிபர் எப்படி தொழிலை நடத்துவோர்களோ அதைப்போன்று சிரத்தையோடு எடுத்துக்கொள்வார். ஏதோ வந்தோம், போனோம் என்று இருக்கமாட்டார்.  குறிப்பு எடுத்துக் கொள்வார், ஏற்கனவே நடத்தப்பட்ட கூட்டத்தில் கூறியதை குறித்து வைத்துக் கொண்டு அடுத்த முறை கூட்டம் நடைபெறும் போது அதிகாரிகளிடம் என்ன செய்துள்ளீர்கள் என்று கேட்பார். தலைமை செயலகத்துக்கு சென்று அதை தொடர்ந்து கண்காணிப்பார். தொழில் நுட்பத்தில் புதிதாக வரும் மாற்றத்தை கேட்டு தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். அதாவது திட்டக்குழுவிற்க்கு வெளியில் இருந்து வரும் அதிகாரிகளிடம் புதிதாக வரும் தொழில்நுட்பம் குறித்து பேசுவார். தமிழ்நாட்டை பெரிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்டவர். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டை பெரிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,D. R. P. Raja ,Tamil Nadu ,State Planning Commission ,Vice Chairman ,Jayaranjan ,CHENNAI ,Industry ,D.R.P.Raja ,Deputy Chairman ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை...