×

சிஆர்பிஎப்  தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: சி.ஆர்.பி.எப்., துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே 8ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.ஆர்.பி.எப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத்தேர்வை நடத்த வேண்டும்.

The post சிஆர்பிஎப்  தேர்வில் தமிழ் புறக்கணிப்பு: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Secretary General ,Vaiko ,Madimuga ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?