×

என்.எல்.சி நிறுவனம் அத்துமீறக் கூடாது: அன்புமணி எச்சரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவு: கடலூர் வளையமாதேவி பகுதியில் உள்ள வேளாண் விளைநிலங்களை சமன்படுத்தும் பணியிலும், சாலை அமைக்கும் பணியிலும் அத்துமீறி ஈடுபட்ட என்.எல்.சி அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, விரட்டியடித்துள்ளனர்.

என். எல்.சி நிறுவனத்தின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும்.பொதுமக்களின் உணர்வுகளை மதிக்கவும், அவர்களின் வாழ்வாதாரங்களைக் காக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

The post என்.எல்.சி நிறுவனம் அத்துமீறக் கூடாது: அன்புமணி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : NLC ,Anbumani ,CHENNAI ,PAMC ,President ,Cuddalore Rangamadevi ,Dinakaran ,
× RELATED கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவு – அன்புமணி