×

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அவகாசம் தேவை: ஜெலன்ஸ்கி சொல்கிறார்

கீவ்: ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு தயாராவதற்கு உக்ரைன் படைகளுக்கு காலஅவகாசம் தேவை என்று அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே 14 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,‘‘நம்மிடம் இருப்பதை வைத்து நாம் முன்னேறி சென்று வெற்றி பெறலாம். ஆனால் இப்போது தாக்குதலை நடத்துவது சரியானதாக இருக்காது . ஏனென்றால் நாம் நிறைய பேரை இழக்க நேரிடும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நான் நினைக்கிறேன். எனவே நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படைகளை பின்னோக்கி தள்ளும் எதிர்தாக்குதலை தொடங்குவதற்கு நமக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவையாகும்” என்றார்.

The post ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அவகாசம் தேவை: ஜெலன்ஸ்கி சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Zelensky ,Kiev ,President ,Ukraine… ,Dinakaran ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...