×

கர்நாடக தேர்தலில் பயன்படுத்தியது பழைய மின்னணு எந்திரங்களா? காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: தென்ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கர்நாடக தேர்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைக்கு மே10ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்து, நாளை தேர்தல் முடிவுகள் வௌியாகவுள்ளன. இந்த நிலையில், மே 8ம் தேதி காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “தென்ஆப்பிரிக்கா தேர்தலில் முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்படாமல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு மறுபடியும் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், “தென்ஆப்பிரிக்காவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தயாரித்த புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டன” என்று தெரிவித்துள்ளது.

The post கர்நாடக தேர்தலில் பயன்படுத்தியது பழைய மின்னணு எந்திரங்களா? காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Election Commission ,New Delhi ,South Africa ,Election Commission ,Karnataka Legislation ,Congress ,Dinakaran ,
× RELATED தேவகவுடா பேரன் மீதான பாலியல் புகாரில்...