×

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே பி.மேட்டுப்பாளையம் வினோபா வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (45). இவர், செரையாம்பாளையத்தில் பவானி ஆற்றங்கரையில் உள்ள விவசாய நிலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான மீன் பண்ணை அமைத்து உள்ளார். இதற்கு தமிழக மீன் வளர்ச்சித்துறை ரூ.2.80 லட்சம் மானியம் 2 கட்டமாக வழங்கி உள்ளது. கடந்த 17 ம் தேதி கார்த்திக்கை தொடர்பு கொண்ட கோபி மீன் வளர்ச்சித்துறை ஆய்வாளர் அருள்ராஜ் (47), ‘‘2ம் கட்ட மானியத்தொகை 1.20 லட்சம் 2 நாளில் வழங்கப்படும். இதற்கு ரூ.31 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும்’’ என கேட்டுள்ளார். அதன்படி, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கார்த்திக், அருள்ராஜிடம் நேற்று வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அருள்ராஜை கைது செய்தனர்.

The post லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Gopi ,Karthik ,P.Mettupalayam Vinoba road ,Gopi, Erode district ,Bhavani river ,Seraiampalayam ,
× RELATED பெண் ஆய்வாளரை தவறாக பேசிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!!