×

பறை இசைக்கருவியுடன் பயணித்த மாணவியை நடுவழியில் இறக்கிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்

நெல்லை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த கணேசன் மகள் ரஞ்ஜிதா. நெல்லை அருகே சீதபற்பநல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி கலை நிகழ்ச்சிக்காக ரஞ்ஜிதா, திருப்புவனத்தில் இருந்து 5 தோல் பறை கருவிகள், ஒரு டிரம்ஸ் ஆகியவற்றை கொண்டு வந்திருந்தார். கலைநிகழ்ச்சிகள் முடிந்து நேற்று முன்தினம் இரவு ஊருக்கு செல்ல தோல் பறை இசைக்கருவிகளுடன் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் ஏறினார். வண்ணார்பேட்டை வந்த போது ரஞ்சிதாவுக்கு டிக்கெட் தர வந்த, கண்டக்டர் தோல் பறை கருவிகளை கண்டு ஆத்திரமடைந்து, மாணவியை பஸ்சை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து மாணவி, அவரது நண்பர்களிடம் தெரிவிக்கவும். அவர்கள் வண்ணார்பேட்டைக்கு வந்து மாணவியை மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாணவியை இரவு நேரத்தில் நடுவழியில் இறக்கி விட்ட நெல்லை தாமிரபரணி பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் கணபதியை (55) 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரை திசையன்விளைக்கு இடமாற்றம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post பறை இசைக்கருவியுடன் பயணித்த மாணவியை நடுவழியில் இறக்கிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Ganesan ,Ranjitha ,Thirupuvanam, Sivagangai district ,Sitapalpanallur ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...