×

இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது சட்ட விரோதமானது என்றும், ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), நேற்று முன்தினம் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை சுற்றி வளைத்த துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இம்ரான்கான் ஊழல் செய்ததில் பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இம்ரான்கான் கைதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எற்பட்ட வன்முறையில் 6 பேர் பலியாகினர். அவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தபோது, துணை ராணுவத்தினர் கைது செய்த விதம் விவாதப்பொருளானது.

அதுகுறித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இம்ரான் கைது செய்யப்பட்து சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.

The post இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Pakistani Supreme Court ,Islamabad ,Imrankan ,Pakistan Supreme Court ,Dinakaran ,
× RELATED ராகுலை பிரதமராக்க பாக். துடிக்கிறது: பிரதமர் மோடி பிரசாரம்