×

மோக்கா புயல் எதிரொலி: கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவுரை..!!

சென்னை: மோக்கா புயல் காரணமாக தெற்கு அந்தமான் கடல்பகுதிக்கு மே 14 வரை செல்ல வேண்டாம் என பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த அழ்ந்த காற்றழுத்த மண்டலம் தீவிர புயலாக மாறி கடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு மோக்கா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது மேலும், அதி தீவிர புயமாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து 13ம் தேதியன்று சற்று வலுவிழந்து 14ம் தேதியன்று 120 – 145 கி.மீ. / மணி வேகத்துடன் வங்க தேசம் மற்றும் மியான்மர் இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மீன்வளத் துறை ஆணையர் அவர்களுக்கும், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை பெருநகர ஆணையர் அவர்களுக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள் வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மோக்கா புயல் எதிரொலி: கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவுரை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,KKSSR ,Ramachandran ,Chennai ,South Andaman Sea ,Moka ,
× RELATED அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி