×

ராயகிரியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் எந்த பணியையும் மேற்கொள்ளக் தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

தென்காசி: ராயகிரியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ராயகிரி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயில் நிர்வாகி காளிமுத்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கோயில் நிலத்தை கையகப்படுத்தி ராயகிரி பேரூராட்சி செயல் அலுவலர் நீர் நிலையில் கட்டுமானப்பணியை தொடங்க ஏற்பாடு செய்துள்ளார் என்றும் ராயகிரி பேரூராட்சி செயல் அலுவலர் கட்டுமானம் மற்றும் வேறு எந்த பணியையும் மேற்கொள்ள கூடாது என தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் கூறும் கோயிலுக்கு சொந்தமான நிலம், அரசு புறம்போக்கு நிலமாகும், கட்டிடங்கள் கட்டப்படவில்லை; தூர்வாரி குளத்தின் கரையோரம் நடைபாதை அமைக்கப்பட உள்ளது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட இடம் கோயிலுக்கு சொந்தமானதா அல்லது அரசு புறம்போக்கு நிலமா என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டது. ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என தடைவிதித்து ஐகோர்ட் கிளை வழக்கை ஒத்திவைத்தது.

The post ராயகிரியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் எந்த பணியையும் மேற்கொள்ளக் தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Kaliamman Temple ,Rayagiri ,ICourt ,Tenkasi ,Tenkasi… ,Kaliyamman Temple ,Dinakaran ,
× RELATED வெள்ள எச்சரிக்கை: கன்னியாகுமரி காளிகேசம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை