×

நான் ஆட்டமிழந்து டோனி களமிறங்கினால் ரசிகர்களுக்கு குஷி; ஜடேஜா ஜாலி பேட்டி

ஆட்ட நாயகன் ஜடேஜா கூறுகையில், “ஒரு சுழல் பந்துவீச்சாளராக ஆடுகளத்தில் பந்து நின்று திரும்பும் போது மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் நாங்கள் இங்குதான் பயிற்சி செய்து வருகிறோம். இதனால் எந்த லெங்தில், எந்த வேகத்தில் பந்து வீசவேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். அதுதான் சொந்த மண்ணில் விளையாடுவதில் நன்மையாகும். நான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்குகிறேன். நான் பேட்டிங் செய்யும்போதெல்லாம் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள். காரணம் அவர்கள் டோனியை விரைவில் பார்க்க வேண்டும் என்பதற்காக மகி பாய் மகிபாய் என்று கத்துகிறார்கள். நான் ஆட்டமிழந்து போகும் போது டோனி வருகிறார் என்பதற்காக மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள்.

கொஞ்சம் யோசிச்சு பாருங்கள்… இதுவே நான் பேட்டிங் வரிசையில் கொஞ்சம் முன்பு களமிறங்கி இருந்தால், அப்போதும் எங்கள் ரசிகர்கள் நான் விரைவில் ஆட்டம் இழக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள்’’ என்று ஜாலியாக கூறினார்.நடப்பு தொடரில் ஜடேஜா 11 போட்டிகளில் பேட்டிங்கில் 113 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 25 ஆகும். சராசரி 18 என்ற அளவிலே இருக்கிறது. ஜடேஜா கடைசி நேரத்தில் களமிறங்குவதால், இந்த தொடரில் வெறும் 80 பந்துகளை மட்டுமே சந்தித்திருக்கிறார். எனினும் ஜடேஜா தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்து பழைய ஜடேஜாவாக திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

The post நான் ஆட்டமிழந்து டோனி களமிறங்கினால் ரசிகர்களுக்கு குஷி; ஜடேஜா ஜாலி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tony ,Jadeja Jolly ,Jadeja ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானுக்கு பயிற்சி அளிக்க ரெடி: அஜய் ஜடேஜா அதிரடி