×

ஹூண்டாய் நிறுவனம் 15,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை, 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு வழங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஹூண்டாய் நிறுவனம் 15,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை, 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு வழங்குகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு – ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.20,000 கோடி முதலீட்டில் ஹுண்டாய் தொழிற்சாலையை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

மின்வாகன மின்னேற்று நிலையங்கள், நவீன வகை கார்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.23,000 கோடியாக உயர்ந்துள்ளது. வாகனங்கள் தயாரிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டுக்கான மின் வாகன கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனம் 2வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் 15,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பையும், 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பை உருவாக்கி தர உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர், தொழில்துறை ஏற்கெனவே முன்னேறியுள்ளது; இனிமேலும் உயரப் போகிறது.

தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அந்த துறை அதிகாரிகள் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். புதிய தொழில்துறை அமைச்சர் ராஜா தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புகிறேன். தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அளித்துவரும் ஆதரவு என்றும் தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post ஹூண்டாய் நிறுவனம் 15,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை, 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு வழங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Hyundai ,Chief Minister ,MC. G.K. Stalin ,Chennai ,Hyundai Company ,B.C. G.K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...