×

அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் அருகே ஒரே வாரத்திற்குள் 3வது முறையாக வெடிகுண்டு தாக்குதல்!!

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் அருகே ஒரே வாரத்திற்குள் 3வது முறையாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அருகே ஹெரிடேஜ் சாலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த போலீசார், தீவிர விசாரணைக்கு பிறகு 5 பேரை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் அமைதியை சீர்குலைக்க 5 பேரும் இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து 2 முறை பொற்கோவில் அருகே குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் சில கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்த நிலையில், சுற்றுலா பயணி ஒருவரும் காயம் அடைந்தார். இந்த நிலையில் தற்போது 3வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிப் பொருளை குளிர்பான கேன்களில் அடைத்து வீசப்பட்டு இருந்தது தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் மற்றும் பஞ்சாப் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பதற்றமான இந்த சூழலை பஞ்சாப் அரசு முறையாக கையாள தவறவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டப்படுகிறது.

The post அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் அருகே ஒரே வாரத்திற்குள் 3வது முறையாக வெடிகுண்டு தாக்குதல்!! appeared first on Dinakaran.

Tags : Bourgow ,Amritsaras ,Chandigarh ,Golchow ,Amritsaras, Punjab ,GOLKO ,Amirthasaras ,Dinakaran ,
× RELATED பஞ்சாப்பில் அமிர்தசரஸ் -டெல்லி ரயில்...