×

மம்மி, கோட்டைகள், ஒட்டகம்!: எகிப்தில் பார்வையாளர்களை கவர்ந்த மணல் சிற்ப திருவிழா..!!

எகிப்து: எகிப்தில் கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக நடைபெற்ற மணல் சிற்ப திருவிழா பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது. மத்திய கிழக்கு நாடான எகிப்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், கோடை கால தொடக்கத்தை குறிக்கும் விதமாக மணல் சிற்ப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அலெக்ஸான்ரியா கடற்கரையில் நடைபெறும் மணல் சிற்ப திருவிழாவில் 13 மணல் சிற்ப கலைஞர்கள் மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஓவிய கலைத்துறை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் மம்மி மணல் சிற்பங்கள், எகிப்தில் உள்ள முக்கிய கோட்டைகள் மற்றும் ஒட்டக மணல் சிற்பங்கள் போன்றவற்றை மணல் சிற்ப கலைஞர்கள் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. மணல் சிற்ப திருவிழாவின் இறுதியில் சிறந்த சிற்பங்களை வடிவமைத்த மூவருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

The post மம்மி, கோட்டைகள், ஒட்டகம்!: எகிப்தில் பார்வையாளர்களை கவர்ந்த மணல் சிற்ப திருவிழா..!! appeared first on Dinakaran.

Tags : Mummy, ,Camel! ,Sculpting ,Egypt ,Middle Eastern ,Mummy, Forts, Camel!: Sand Sculpting Festival ,Dinakaran ,
× RELATED கோவையில் ‘ஒட்டக பால் டீ’ பண்ணையில் அதிரடி நடவடிக்கை