×

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து..!!

சென்னை: 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை கவிஞர் வைரமுத்து பரிசளித்தார். திண்டுக்கல்லில் உள்ள மாணவி நந்தினி வீட்டுக்கு நேரில் சென்ற கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசளித்தார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. இதில், திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறையாகும். கூலித் தொழிலாளியின் மகள் அபார சாதனை படைத்ததற்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில்,

ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது

எப்படிப் பாராட்டுவது?

அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்

திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்

உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே!

என்று கூறியிருந்தார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து கூறியபடி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை நேரில் சென்று பரிசளித்தார்.

The post 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து..!! appeared first on Dinakaran.

Tags : Vairamuthu ,Nandini ,Chennai ,Poet ,
× RELATED இளையராஜா பற்றி குற்றம் சொல்வதா?.. வைரமுத்துவுக்கு கங்கை அமரன் எச்சரிக்கை