×

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.ராஜா அமைச்சராக பதவியேற்பு

சென்னை: நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து 2011, 2016, 2021 ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளாள். 1976ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்து டி.ஆர்.பி.ராஜா, சென்னை கிறிஸ்துவ பள்ளி, லயோலா கல்லூரியில் படைத்தவர். உளவியல் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் டி.ஆர்.பி.ராஜா, இந்நிலையில் இன்று மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.ராஜா அமைச்சராக பதவியேற்றார்.

டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு நிகழிச்சி நடைபெற்றது.மன்னார்குடி தொகுதியில் இருந்து 3 வது முறையாக சட்டப்பேரவைக்கு டி.ஆர்.பி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் கணேசன், மனோ தங்கராஜ், தங்கம் தென்னரசு, ரகுபதி, மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

The post மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.ராஜா அமைச்சராக பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Assemblymember ,D. R.R. ,Chennai ,Dakshagam R.R. Palu ,Raja Mannargudi ,Mannargudi Assemblymember ,Dinakaran ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...