×

எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் வடிவமைத்து சேலம் தனியார் பொறியியல் மாணவர் சாதனை..!!

சேலம்: எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் வடிவமைத்து சேலம் தனியார் பொறியியல் மாணவர் சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடேசனின் மகன் யோக பிரதீப். காக்காபாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சிறிய சக்கரங்களை கொண்ட எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டரை நம் இந்திய சாலைகளில் பயணிப்பதற்கு ஏற்ப பெரிய சக்கரங்களை பொருத்தி வடிவமைத்துள்ளார். 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது 1 மாத காலமாக கிக் ஸ்கூட்டரில் நின்றபடியே ஓட்டிக்கொண்டு 40 கி.மீ. தூர கல்லூரிக்கு சென்று வருகிறார். மாணவர் கைரேகை பதியாமல் வாகனத்தை யாரும் இயக்க முடியாது.

The post எலக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர் வடிவமைத்து சேலம் தனியார் பொறியியல் மாணவர் சாதனை..!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem District ,Dinakaran ,
× RELATED மாணவிகளை கிண்டல் செய்ததால் பள்ளி...