×

சோழவரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம்: பொன்னேரி வட்டாட்சியர் தகவல்

திருவள்ளூர், மே 11: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆவடி காவல் சரகத்திற்குட்பட்ட சோழவரம் காவல் நிலையத்தில் உரிமை கோரப்படாத வழக்குகளில் சம்மந்தப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட 541 இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை திருவள்ளூர் மாவட்ட அரசிதழ் படியும், பொன்னேரி வட்டாட்சியர் உத்திரவின் படியும் வருகின்ற 16, 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் காலை 10 மணியளவில் சோழவரம் ஈ 5 காவல் நிலைய வளாகத்தில் 541 இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படும். வாகனங்களை ஏலம் கேட்கும் நபர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முன் வைப்பு கட்டணம் தொகையாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

அதற்க்கான (டோக்கன்) காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும்.வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ஜிஎஸ்டி 18 சதவிகிதம் செலுத்தி விட வேண்டும். வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை சோழவரம் காவல் நிலையத்திற்கு முன்பு வைக்கப்பட்டுள்ள தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி விளம்பரம்படுத்தப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வரவேண்டும். ஏலத்தில் கலந்துகொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணம் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி வழங்கப்படும் என பொன்னேரி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

The post சோழவரம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம்: பொன்னேரி வட்டாட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Station ,Ponneri District ,Tiruvallur ,Thiruvallur District ,Cholavaram Police Station ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...