×

1 டன் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

கோவை, மே 11: கோவை சிங்காநல்லூர் அருகே பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருந்தது. அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுக்கரை குமிட்டிபதி பகுதியை சேர்ந்த வல்லரசு (25) மற்றும் வேலந்தாவளத்தை சேர்ந்த நல்ல மணி (23) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்தனர். வாகன உரிமையாளரான கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த காஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post 1 டன் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Police of Pollachi Civil Supply Crime Investigation Division ,Singanallur, Coimbatore.… ,Dinakaran ,
× RELATED கோவை புத்தகத் திருவிழாவில் சாழல் சொற்போர் நிகழ்வு