×

சாலை பள்ளத்தில் சிக்கிய மினி பஸ்

சாத்தூர், மே 11: சாத்தூர் மெயின் சாலையில் காலை முதல் இருக்கன்குடி, கோவில்பட்டி பகுதிகளுக்கு நேற்று காலை இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் சென்று கொண்டு இருந்தது. சாத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சடையம்பட்டி கிராமத்திற்கு சென்ற தனியார் மினி பேருந்து சக்கரம் சாத்தூர் நகர் காவல் நிலையம் எதிரே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி கொண்டது. பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு ஜேசிபி உதவியுடன் மினி பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் சாத்தூர் மெயின் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post சாலை பள்ளத்தில் சிக்கிய மினி பஸ் appeared first on Dinakaran.

Tags : Chatur ,Istankudi, Kovilpatti ,Dinakaran ,
× RELATED சாத்தூர் படந்தால் சந்திப்பில்...