×

கொடைக்கானலில் இன்று மின்தடை

கொடைக்கானல், மே 11: கொடைக்கானலில் இன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கொடைக்கானல் நகர் பகுதி, கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ் மலைப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் துணை மின் நிலையம் மற்றும் உயர் அழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ,கொடைக்கானல் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான கொடைக்கானல், அட்டுவம்பட்டி பள்ளங்கி, வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர் பழம்புத்தூர், கவுஞ்சி, கிளாவரை, வடகவுஞ்சி, பெரும்பள்ளம், மேல் பள்ளம், சவரிக்காடு, ஊத்து, மச்சூர்,பேத்துப்பாறை, பெருமாள்மலை, பி எல் செட், சாம காட்டு பள்ளம்,
சவரிக்காடு, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, குப்பம்மாள் பட்டி, கடைசி காடு, பெரியூர், பாச்சலூர், கேசி.பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகளில் இன்று வியாழக்கிழமை 11.5.2023 காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது .இந்த தகவலை வத்தலக்குண்டு மின்சார வாரிய செயற் பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

The post கொடைக்கானலில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kodaikanal Nagar ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது லாரி