×

ஆண்டாங்கோயிலில் தூய்மை பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணிகள்

கரூர், மே 11: கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் ஆண்டாங்கோயில் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தாந்தோணி ஒன்றியத்துக்குட்பட்ட ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி, கோவிந்தம்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியாளர்களுக்காக நடைபெற்ற மருத்துவ முகாமில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் நாம் ஒன்றிணைவோம், பசுமையும், தூய்மையும் நமதாக்குவோம் என்ற அடிப்படையில், ஆண்டாங்கோயில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை, ரத்த கொதிப்பு போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்வதை கலெக்டர் பார்வையிட்டார். ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்களின் வீட்டிற்கே தினமும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கினார். மேலும், பொதுமக்களுக்கு தூய்மை பணியாளர்கள் வரும் போது தங்களுடைய வீட்டில் உள்ள குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்.

தொடர்ந்து, கோவிந்தம்பாளையத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டத்தின் கீழ் அமராவதி பாசன பிரிவு ராஜவாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும் கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.இந்த நிகழ்வில், திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத், கிருஷ்டி, ஊராட்சி மன்ற தலைவர் கேஎம்.பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆண்டாங்கோயிலில் தூய்மை பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்கும் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Andangoil ,Karur ,District Collector ,Prabhu Shankar ,Dandoni Union ,Karur District ,Department of Rural Development ,
× RELATED r 86.95லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் ஆதி...