×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

சென்னை: சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-2023ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்கவேண்டும். ஆதிதிராவிடர் இனத்தவருக்கு திட்டத்தொகையில் 30சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சமும் மற்றும் பழங்குடியினத்தவருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சமும் மானியம் அளிக்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adi Dravidians ,Aavin ,Palakam ,Chennai ,Collector ,Amrita Jyoti ,Adi Dravidar ,
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்