×

கல்வி மையங்களாக மாறும் அங்கன்வாடிகள்: ஒன்றிய அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி திட்டத்தின் (இசிசிஇ) கீழ் கல்வி கற்பித்தல் பொருட்களின் தொகுப்பு அறிமுக விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசியதாவது: அங்கன்வாடி மையங்கள் சத்துணவு மையங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவை கல்வி அளிக்கும் மையமாக மாற வேண்டும். இதற்காக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்காக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடிக்கு வரும் 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பிதற்கான பயிற்சி தொடர்பாக பணிக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையில், 3 நாள் நேரடி பயிற்சி, அதைத் தொடர்ந்து புதுப்பித்தல் பயிற்சி, புத்தகங்கள் மற்றும் பொம்மைகள் உட்பட கற்பித்தல் பொருட்களை பயன்படுத்துதல், பொம்மைகளை உருவாக்க கற்றுக் கொள்ள பட்டறை ஆகியவை வழங்க பரிந்துரை செய்துள்ளது. இதன்படி அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். இதில் பெற்றோரும் பங்களித்து வருகின்றனர்’’ என்றார்.

The post கல்வி மையங்களாக மாறும் அங்கன்வாடிகள்: ஒன்றிய அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ankanwadis ,Union Minister ,New Delhi ,Delhi ,
× RELATED அமேதியில் போட்டியா?.. ராபர்ட் வத்ரா ரிஷிகேஷில் வழிபாடு