×

மரத்தில் இருந்து தவறி விழுந்து ஓடை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் சிங்கராஜ் மகன் சிவபிரசாத் (12). இவரது உறவினர் தென்காசி மாவட்டம், பருவக்குடி அடுத்துள்ள பால்வண்ணபுரம் கிராமத்தை சேர்ந்த ராமராஜ் மகன் சரண் (8). பள்ளி மாணவர்கள். கோடை விடுமுறை என்பதால், சரண் எஸ்.ராமலிங்கபுரத்திற்கு வந்துள்ளார். இருவரும் நேற்று அச்சங்குளம் கண்மாய் பகுதியில் நண்பர்களுடன் விளையாடினர். ஓடை கரையில் இருந்த மரத்தில் ஏறி கொடிக்காய் பறித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிவராஜ், சரண் ஆகியோர் மரத்தில் இருந்து தவறி, ஓடைக்குள் இருந்த பள்ளத்தில் விழுந்தனர். நண்பர்களுக்கு நீச்சல் தெரியாததால், ஊருக்குள் சென்று உறவினர்களை அழைத்து வந்தனர். அதற்குள் சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post மரத்தில் இருந்து தவறி விழுந்து ஓடை நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Singaraj ,Sivaprasad ,S. Ramalingapuram ,Rajapalayam, Virudhunagar district ,Tenkasi district ,
× RELATED பொதுத்தேர்வில் அசத்திய மாணவர்களுக்கு பரிசு