×

ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு மே 14ல் வருகை

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மே 14ம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தர உள்ளார். அன்று மாலை கொடைக்கானல் கோஹினூர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் மே 15ம் தேதி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

அன்று மாலை கொடைக்கானலில் சுற்றுலா இடங்களுக்கும் ஆளுநர் செல்ல உள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மே 16ம் தேதி மதுரை செல்லும் ஆளுநர் அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார். கொடைக்கானலில் 3 நாட்கள் ஆளுநர் ஆர்என்.ரவி தங்குவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு மே 14ல் வருகை appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Kodaikanal ,Tamil Nadu ,Dindigul district ,Governor RN ,Ravi ,
× RELATED மறைந்த வேளாண் விஞ்ஞானி...