×

கேரள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெண் டாக்டர் குத்திக் கொலை: பள்ளி ஆசிரியர் வெறிச்செயல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு போலீசார் அழைத்து வந்த பள்ளி ஆசிரியர், பெண் டாக்டரை கத்திரிகோலால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குடவட்டூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் (42). அருகிலுள்ள நெடும்பனை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். போதைப் பொருளுக்கு அடிமையான இவருக்கும், இவரது தம்பிக்கும் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு தகராறு ஏற்பட்டது. இதில் சந்தீப்பின் காலில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்த பூயப்பள்ளி போலீசார் சந்தீப்பை பிடித்து மருத்துவ பரிசோதனைக்காக அதிகாலை 4.30 மணியளவில் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு வந்தனா தாஸ் (23) என்ற பெண் பயிற்சி டாக்டர் சிகிச்சை அளித்தார்.

அருகில் போலீசார் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆவேசமடைந்தவராக சந்தீப், அங்கு வைக்கப்பட்டிருந்த கத்திரிகோல் மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்து டாக்டர் வந்தனா தாசை நெஞ்சிலும், முதுகிலும் சரமாரியாக குத்தினார்.
அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சந்தீப்பை பிடிக்க முயன்றபோது அவர்களையும் சரமாரியாக குத்தினார். இதில் போலீஸ்காரர் அலெக்ஸ், மருத்துவமனை ஊழியர்களான பேபி மோகன், மணிலால் மற்றும் சந்தீப்பின் உறவினர் பினு ஆகியோர் காயமடைந்தனர். பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் சந்தீப்பை மடக்கிப்பிடித்தனர்.

இதற்கிடையே படுகாயமடைந்த டாக்டர் வந்தனா தாஸ் உடனடியாக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வந்தனா தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது முதுகு மற்றும் நெஞ்சில் 6 குத்து காயங்கள் காணப்பட்டன. ஆசிரியர் சந்தீப் சஸ்ெபண்ட் செய்யப்பட்டுள்ளதாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறினார். குற்றவாளி மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

The post கேரள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பெண் டாக்டர் குத்திக் கொலை: பள்ளி ஆசிரியர் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Kerala government hospital ,Thiruvananthapuram ,Kottarakarai Government Hospital ,Kerala State ,Kathrikolal ,
× RELATED மோடியின் வருகையை முன்னிட்டு...