×

உ.பி., ஒடிசா, மேகாலயாவில் 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல்

ஜலந்தர்: உத்தரப்பிரதேசத்தில் 2 தொகுதிகள், ஒடிசா, மேகாலயாவில் தலா ஒரு தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. ஒடிசாவில் ஜார்சுகுடா தொகுதியில் காலை 7 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் மேகாலயாவின் சோஹியோங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

உத்தரப்பிரதேசத்தின் சவுர் மற்றும் சான்பேவில் காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே போலீசார் வாக்களிக்கவிடாமல் தடுப்பதாக சமாஜ்வாதி கட்சியினர் புகார் எழுப்பினார்கள். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பஞ்சாபில் விதி மீறிய ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: பஞ்சாப் மாநிலம்,ஜலந்தர் மக்களவை தொகுதியில் நேற்று இடைதேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவான தல்பீர் சிங் டோங்க் ஷாகோட் பகுதியில் இருந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் கரம்ஜித் கவுர் சவுத்ரி தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் அளித்தார். இதையடுத்து தல்பீர் சிங் டோங்கை போலீசார் கைது செய்தனர்.

The post உ.பி., ஒடிசா, மேகாலயாவில் 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் appeared first on Dinakaran.

Tags : UP, Odisha, ,Meghalaya ,Jalandhar ,Uttar Pradesh ,Odisha ,Jharsuguda ,Odisha… ,Dinakaran ,
× RELATED மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு