×

அமெரிக்கா – மெக்சிகோ எல்லை திறப்பில் குழப்பம்: அதிபர் ஜோ பைடன் விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்கா – மெக்சிகோ இடையேயான எல்லையை திறப்பதில் குழப்பம் நீடிப்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்தபோது அமெரிக்கா மெக்சிகோ எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அவ்வாறு வருபவர்களை அப்படியே திருப்பி அனுப்ப ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இன்று முதல் அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. இந்த தளர்வு அறிவிக்கப்பட்டு அமெரிக்க மெக்சிகோ எல்லை திறக்கப்பட்டால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்வோர் எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் நியூ மெக்சிகோ, டெக்சாஸ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சட்டவிரோதமாக மெக்சிகோ எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க பைடன் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால், அரசு செயலி மூலம் விண்ணப்பித்தால் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிபர் பைடன் கூறும்போது, “கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கிய பிறகும் மெக்சிகோ எல்லையை திறப்பதில் குழப்பமும், சிக்கலும் நீடிக்கிறது. மெக்சிகோ எல்லை விவகாரத்தில் சீர்திருத்தம் செய்ய நிர்வாகம் விரும்புகிறது. அதற்கு சிறிது காலங்கள் ஆகும்” என்றார்.

The post அமெரிக்கா – மெக்சிகோ எல்லை திறப்பில் குழப்பம்: அதிபர் ஜோ பைடன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : US-Mexico ,President Joe Biden ,Washington ,United States ,Mexico ,Corona ,America ,US-Mexico border ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை