×

விவசாயிகள் கோரிக்கையை ஏற்காவிட்டால் பாஜக தோல்வி அடையும்: மேகலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு

ஜுன்ஜுனு: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஜாட் தலைவரான சத்யபால் மாலிக் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது; விவசாயிகள் கோரும் குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு தர முன்வந்தால் போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிவித்தார். ஒன்றிய அரசு அடம்பிடித்தால் உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக தோல்வியடையும் என குறிப்பிட்ட அவர் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் பாஜகவினரால் நுழைய கூட முடியாதது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சத்யபால் மாலிக் வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரதமர் உள்துறை அமைச்சர் என அனைவரிடமும் சண்டையிட்டதாக தெரிவித்தார். நீங்கள் அனைவரும் தவறு செய்கிறீர்கள்; தவறை திருத்தி கொள்ளுங்கள் என்றும் வாதிட்டதாக சத்யபால் மாலிக் கூறினார். …

The post விவசாயிகள் கோரிக்கையை ஏற்காவிட்டால் பாஜக தோல்வி அடையும்: மேகலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Megalaya ,Governor ,Satyapal Malik ,Meghalaya ,Uttar ,Pradesh ,Meghalaya Governor ,
× RELATED EVM மற்றும் VVPAT இயந்திரங்களில் பாஜக என...