×

கர்நாடகாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க நூதன முயற்சி: வாக்காளர்களுக்கு தோசை, இனிப்பு, பழச்சாறு வழங்கி அசத்தல்

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பெங்களூரு நகரில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் விதமாக தனியார் உணவகம் ஒன்றில் வாக்களித்தவருக்கு இலவசமாக தோசை, இனிப்பு மற்றும் பழச்சாறு வழங்கி அசத்தி வருகிறது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், பெங்களூரு நகரில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் அருகே தனியார் உணவகம் வாக்களித்தவர்களுக்கு தோசை, இனிப்பு மற்றும் பழச்சாறு வழங்கி வருகிறது. உணவகத்தின் நடவடிக்கைக்கு தேர்தல் நடத்த விதிமுறைகளை காரணம் காட்டி அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றம் அனுமதியை பெற்று வாக்காளர்களுக்கு இலவச தோசை, இனிப்பு மற்றும் பழச்சாறு வழங்கப்படுகிறது. தனியார் உணவகத்தின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

The post கர்நாடகாவில் வாக்குப்பதிவை அதிகரிக்க நூதன முயற்சி: வாக்காளர்களுக்கு தோசை, இனிப்பு, பழச்சாறு வழங்கி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Nudana ,Karnataka ,Bengaluru ,Nurudana ,
× RELATED ₹1 லட்சம் தர்றோம்… போன் நம்பர் கொடுங்க… பாஜ நூதன பிரசாரம்