×

50 ஓவர் உலக கோப்பைக்கு தென்ஆப்ரிக்கா நேரடி தகுதி

துபாய்: வங்கதேசம்-அயர்லாந்து அணிகள் இடையே நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் தென்ஆப்ரிக்கா, அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு நேரடி தகுதிபெற்றது. அயர்லாந்து அணி தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

இதில் 3 போட்டியிலும் வெற்றிபெற்றால் அயர்லாந்து உலக கோப்பைக்கு நேரடி தகுதிபெறலாம் என்ற நிலையில், முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் தென்ஆப்ரிக்கா வாய்ப்பை பெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென்ஆப்ரிக்கா நேரடி தகுதிபெற்றுள்ளன. மற்ற 2 அணிகள் தகுதி சுற்றில் இருந்து தேர்வாகும்.

The post 50 ஓவர் உலக கோப்பைக்கு தென்ஆப்ரிக்கா நேரடி தகுதி appeared first on Dinakaran.

Tags : South Africa ,50-over World Cup ,Dubai ,Bangladesh ,Ireland ,India ,50 over World Cup ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நடக்கும் 50 ஓவர்...