×

மா, தென்னை, இலவம் பஞ்சு உற்பத்தி குறைவு போடி பகுதியில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு-கவலையில் விவசாயிகள்

போடி : தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நான்கு புறமும் மலைகள் சூழ போடிநாயக்கனூர் அமைந்துள்ளது.பசுமை நிறைந்த இந்த பகுதிகளில் போடிமெட்டு துவங்கி மேற்கு, தெற்கு, வடக்கு மலை மற்றும் குரங்கணி, கொட்டகுடி, காரிப்பட்டி, அடகு பாறை, பிச்சாங்கரை, சாமக்களம் முனீஸ்வரன் கோயில் பரவு, மேலப்பரவு, கீழபரவு, முந்தல், முட்டுகோம்பை, சிறக்காடு, ஊரடி, ஊத்துக்காடு உரல் மெத்து, வடமலை நாச்சியம்மன் கோயில் பகுதி, அகமலை, சோலையூர், பரமசிவன் கோயில் மலை அடிவாரம், சுற்றியுள்ள பகுதிகளில் பல தரப்பட்ட விவசாயம் நடந்து வருகிறது.புகழ்பெற்ற கொட்டகுடி ஆற்று நீர் பாசனத்தில் ஒரு போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 20 ஆயிரம் ஏக்கரில் மாந்தோப்பு, 10 ஆயிரம் ஏக்கரில் தென்னந்தோப்பு, 5 ஆயிரம் ஏக்கரில் இலவம் பஞ்சு தோப்புகளும் உள்ளன.

வருடத்தில் 3 மாதம் வரை நல்ல சீசனாக மாவும், இலவம் பஞ்சும் விவசாயிகளுக்கு பலன் கொடுக்கிறது.இதில் தென்னந்தோப்போ 45 நாட்களுக்கு ஒருமுறை பலன் தருகிறது. மேலும் 30 நாட்களில் இளநீர் விற்பனைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்கின்றனர். ஆனால் இயற்கையின் பருவ காலநிலை மாற்றத்தால் செல் பூச்சிகள் ஆயிரக்கணக்கில் தோன்றி மரங்களை தாக்கியது. 100 சதம் மாம்பழ உற்பத்தியில் 30 சதவீதம் மட்டுமே மிஞ்சி அறுவடை செய்து பக்குவப்படுத்தி உள்ளூர், கேரளா என வெளி மா நிலங்களுக்கும், முதல் தரத்தை வெளி நாடுகளுக்கும் தற்போது அனுப்பும் பணி நடந்து வருகிறது.

அதே போல் இலவசம் பஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் மெத்தை, தலையணைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் குறைந்து வருவதால் இந்த இலவசம் பஞ்சும் கவலை கொள்ளும் நிலையில் தான் உள்ளது.போடியில் செயல்படும் இலவம் பஞ்சு தொழிற்சாலைகளும் சில இழுத்து மூடப்பட்டு வருகிறது, பல பஞ்சு பேட்டைகள் லாபம் இல்லாமல் ஏதோ பரம்பரையாக செய்து வரும் தொழில் வேறு தொழிலுக்கு செல்ல மனம் இல்லாமல் பராமரித்து தொழிலாளருக்கு வேலை கொடுத்து நடத்தி வருகின்றனர். இலவம் தோப்புகளில் இலவம் நெத்து வெடித்து பஞ்சுகள் எல்லாம் சிதறி தோட்டத்திற்குள் வீணாக காற்றில் அங்கும் பறந்து கிடக்கிறது. இவர்களின் கொள் முதலும் மொத்தம் சேராமால் உழைப்பும் சேர்த்து காற்றில் பறந்து வருகிறது.

தென்னையை பொறுத்தவரையில் தற்போது அதிகமான வரத்தின் காரணமாக விலை குறைந்து வருகிறது.ஒரு தேங்காய் ரூ.15 முதல் 25 என விற்பனையானது குறைந்து மார்க்கெட்டில் விலைபோகிறது. இந்த காய்களை தென்னையிலிருந்து இறக்கி மொத்தம் சேர்த்து டன் க ணக்கில் கொப்பறைக்காகவும், பொது மக்களின் பயன்பாட்டிற்கும் அதிகவில் தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களுக்கும் முதல் தரத்தை வெளி நாடுகளுக்கும் இளநீர் உட்பட ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த சில மாதங்களாக பனி, மழை வெயில் என பருவ நிலை மாறிய நிலையால் செல் பூச்சிகளின் தாக்குதலால் மேற்படி மா விவசாயம் 70 சதம் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.

எனவே மா, தென்னை, இலவம் உட்பட வருடத்தில் ரூ.600 கோடி முதல் 700 கோடி வரையில் வர்த்தகம் இருப்பதால் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என பெரும் பயன் அடைந்து வருகின்றனர். இப்போது மூன்று விவசாய பயிர்களும் உற்பத்தி குறைந்துள்ளதால் ரூ 400 கோடிக்கு முற்றிலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக விவசாயிகளின் கோரிக்கையாக 10,000 ஏக்கர் அளவில் மா விவசாய நடப்பதால் அவைகளுக்கு நிரந்தர விலை கிடைக்கவும், மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு நன்மை தரும் விஷயமாக இருக்கும், இலவம் பஞ்சு உற்பத்திக்கு அரசு நேரடி கொள்முதல் செய்து தலையணை, மெத்தைகள் தயாரிக்க கை கொடுத்தால் இலவம் விவசாயம் காக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர்.

விவசாயி சென்னியப்பன் கூறுகையில், ‘‘போடி பகுதிக்கு மா, இலவம் ,தென்னை போன்ற விவசாயமே பெரிதும் கை கொடுக்கிறது. பருவ காலம் மாற்றங்களால் நவநாகரீக காலமாக மாறி இருப்பதா லும் இலவம்பஞ்சு பெரிய அளவில் விற் பனை இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் செல் பூச்சிகளால் மா உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது, தென்னை வரத்து அதிகரித்ததால் அதுவும் விலை குறைந்துவிட்டது.

மூன்று பயிர்களும் பாதிக்கப்பட்டு எப்ப டியும் 400 கோடிக்கு மேல் போடியின் வர்த்தகம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவினை திரும்பப் பெறுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. தமிழக அரசு மா உற்பத்திக்கு நிரந்தரமான விலை கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும், கெட்டுப் போகாமல் பாதுகாக்க கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும்’’என்றார்.

The post மா, தென்னை, இலவம் பஞ்சு உற்பத்தி குறைவு போடி பகுதியில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு-கவலையில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Bodinayakanur ,Western Ghats ,Theni district ,
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்