×

மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களுடன் ராஜ்பவனில் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். சட்டம் படிக்க விரும்புபவர்கள் சிறப்பான சட்டப் பள்ளியை தேர்வு செய்ய வேண்டும். இலக்கை அடைவதில் மாணவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும் என ஆளுநர் அறிவுரை வழங்கினார். கலந்துரையாடலில் 600க்கு 600 எடுத்த நந்தினி, நாமக்கல் மாணவியான திருநங்கை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Chennai ,NEET ,
× RELATED மறைந்த வேளாண் விஞ்ஞானி...