×

எல்லை பாதுகாப்பு படையில் 247 ரேடியோ ஆபரேட்டர், மெக்கானிக் : ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 247 ரேடியோ ஆபரேட்டர், மெக்கானிக் பணிகளுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: 1. Head Constable (Radio Operator).
மொத்த இடங்கள்: 217.
சம்பளம்: ரூ.25,500-81,100.
வயது: 12.05.23 அன்று 18 முதல் 25க்குள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Radio and Television, Electronics, COPA, General Electronics ஆகிய டிரேடுகள் ஏதேனும் ஒன்றில் 2 வருட ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது கணித பாடப் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி.

2. Head Constable (Radio Mechanic):
மொத்த இடங்கள்: 30.
சம்பளம்: ரூ.25,500-81,100.
வயது: 12.05.23 அன்று 18 முதல் 25க்குள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் General Electronics, COPA, Electrician, Fitter, Information Technology,Computer Equipment Maintenance ஆகிய டிரேடுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது கணிதத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி ( இரு பணிகளுக்கும்):
1.உயரம்- ஆண்கள்- 168 செ.மீ இருக்க வேண்டும் (எஸ்டி- 162.5 செ.மீ). பெண்கள்- 157 செ.மீ., (எஸ்டி- 154 செ.மீ).
2. மார்பளவு: ஆண்கள் மட்டும்- சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும். (எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் சாதாரண நிலையில் 76 செ.மீ இருக்க வேண்டும். 5 செ.மீ., விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.).

உடற்திறன் தகுதி:

1. ஆண்கள் 1.6 கி.மீ தூரத்தை 6½ நிமிடங்களிலும், பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும்.
2. ஆண்கள் 11 அடி நீளம் தாண்டுதல், 3½ அடி உயரம் தாண்டுதல் திறன், பெண்கள் 9 அடி நீளம் தாண்டுதல், 3 அடி உயரம் தாண்டுதல் திறன் பெற்றிருக்க வேண்டும்.
எல்லை பாதுகாப்பு படையால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, திறன் அறியும் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு ஜூன் 4ம் தேதி நடைபெறும்.www.rectt.bsf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.05.2023.

The post எல்லை பாதுகாப்பு படையில் 247 ரேடியோ ஆபரேட்டர், மெக்கானிக் : ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Border Security Force ,Indian Border Security Force ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்