×

சிதம்பரம் ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

சிதம்பரம் : சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் நுழைவுவாயில் அருகே நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம், உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், பிச்சாவரம் சுற்றுலா தலம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஒரு நகரமாக திகழ்ந்து வருகிறது. நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவ, மாணவிகள் பலர் ரயிலில் சிதம்பரம் வருகின்றனர். அதேபோல் சென்னை திருச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், திருச்செந்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் நான்கு நடைமேடை உள்ளது. இதில் 1வது மற்றும் 2வது நடைமேடையில் ரயில்கள் வரும்போது, அந்த வழியாக தனியார் கம்பெனிக்கு கரி ஏற்றி ரயில் செல்லும் போது கிராசிங் நடைபெறும். அப்போது 1வது நடைமேடையில் நிற்க வேண்டிய ரயில் 2வது நடைமேடையில் நின்று விடுகிறது. இதனால் நீண்ட தூரம் நடந்து சென்று அங்குள்ள நடைபாதை மேம்பாலம் வழியாக அடுத்த நடைமேடைக்கு பயணிகள் செல்கின்றனர்.

அதற்குள் ரயில் கிளம்பி விடுகிறது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய நேரத்தில் செல்ல முடியாமல் போகிறது. அதேபோல், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே ரயில்வே நிலையத்தின் நுழைவுவாயில் அருகே ரயில்வே நடைபாலம் அமைத்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிதம்பரம் ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chidambaram railway ,Chidambaram ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...