×

சிவகங்கையில் நரிக்குறவர் சமூகத்தில் முதல்முறையாக பிளஸ் 2 மாணவர் தேர்ச்சி: 438 மதிப்பெண்கள் பெற்று மாணவர் தங்கபாண்டி அசத்தல்

சிவகங்கை: சிவகங்கையில் நரிக்குறவர் சமூதாயத்தில் முதல்முறையாக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. சிவகங்கை பழமலை நகரில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊர் ஊராக சென்று திருவிழாக்களில் வளையல், ஊசி, பாசி வியாபாரம் செய்யும் ஜெயபாண்டி, சுகன்யா தம்பதியின் மூத்த மகன் தங்கபாண்டி.

இவர் சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி சிவகங்கை நரிக்குறவர் சமூதாயத்திலேயே முதல் முறையாக தேர்ச்சி பெற்றதோடு 438 மதிப்பெண்கள் பெற்று தங்களது சமூதாய மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளார். ஏழ்மையில் தவிக்கும் தங்கபாண்டி பொறியியல் படிக்க ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிவகங்கையில் நரிக்குறவர் சமூகத்தில் முதல்முறையாக பிளஸ் 2 மாணவர் தேர்ச்சி: 438 மதிப்பெண்கள் பெற்று மாணவர் தங்கபாண்டி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Nariiravar ,Sivaganga ,Thangabandi ,Sivagangai ,Siwaganga Narikari ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம்...