×

ஜனவரி 26ம் தேதி முதல் சதுரகிரி மலையேற 4 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு ஜன. 26 முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. ஜன. 26 முதல் 29ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதியளித்துள்ளது. 26ம் தேதி  பிரதோஷம், 28ம் தேதி தை பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே, தாணிப்பாறை அடிவாரம் மற்றும் கோயில் பகுதியில் மருத்துவ முகாம் நான்கு நாட்களும் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து கோயில் வரை போலீஸ் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. எனவே, போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். விழா ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் செய்துள்ளனர்….

The post ஜனவரி 26ம் தேதி முதல் சதுரகிரி மலையேற 4 நாட்கள் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sadhragiri ,Sathuragiri Sunderamakalingam ,Malaikoyil ,Department of Forests ,Madurai District ,Saduragiri ,Dinakaran ,
× RELATED பங்குனி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்