×

5 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ..மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறுகிறது: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

சென்னை: தமிழ்நாட்டில் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக வெயிலின் தாக்கம் மாநிலம் முழுவதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்றுள்ளது. இது இன்று தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேலும் வலுப்பெற்று 11ம் தேதி வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு கிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம்-மியான்மர் இடையே மே 14ம் தேதி கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த புயலுக்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கதேசத்தில் இருந்து 1,460கிமீ தொலைவில் உள்ள தாழ்வு மண்டலம் 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை தீவிரப்புயலாகவும் நாளை மறுநாள் அதி தீவிரபுயலாகவும் வலுவடையும். மேலும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.மேற்கண்ட புயல் சின்னம் காரணமாக இன்று தொடங்கி 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

The post 5 கி.மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ..மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறுகிறது: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kathi Vail ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...