×

லால்குடி அருகே பூவாளூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

 

லால்குடி: லால்குடி அருகே பூவாளூர் பேரூராட்சி பகுதியில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி மத்திய ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பூவாளூர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் ,வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செழியன், தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் விமலநாதன், மாவட்ட கவுன்சிலர், ஆதி நாயகி ரவி தீபா சுதாகர், பேரூராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி பால்ராஜ் , அவைத்தலைவர் அர்ச்சுனன், மாவட்ட பிரதிநிதிகள் சிவகுமார், கார்த்திகேயன், சார்லஸ், திவ்யநாதன், சுரேஷ்குமார், பொருளாளர் பரமேஸ்வரன், முன்னாள் கவுன்சிலர், சிறப்பு கங்கா பரமானந்தம், சிறப்பு பேச்சாளர் ராதாகிருஷ்ணன், தலைமைக் கழக பேச்சாளர் மாலதி நாராயண சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் துணை செயலாளர்கள் யேசு கோபிநாதன், முத்துலட்சுமி முத்துக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள் அணி நிர்வாகிகள், அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் வக்கீல் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

The post லால்குடி அருகே பூவாளூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Poovalur ,Lalgudi ,Bhoovalur ,Lalgudi.… ,Dinakaran ,
× RELATED குறுவை சாகுபடி தொகுப்பிற்கு...