×

திருவாரூர் மாவட்டத்தில் 1000 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகள்

 

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 1000 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் சாரு தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா ஆர்பாவூர் வாய்க்காலில் 6 கி.மீ தூரமும், உத்திரங்குடி வாய்க்காலில் 6.5 கி.மீ, கீரந்தக்குடி வாய்க்காலில் 2.5 கி.மீ மற்றும் சிட்டிலிங்கம் வாய்க்காலில் 3.5 கி.மீ தூரமும் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சாரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் வலங்கைமான் தாலுக்கா நத்தம் வாய்க்காலில் 3.5 கி.மீ தூரமும், பாடகச்சேரி வாய்க்காலில் 3 கி.மீ மற்றும் செம்மங்குடி வாய்க்காலில் 4 கி.மீ, வடக்குபட்டம் கிராமம் கிளியன் வாய்க்காலில் 8.5 கி.மீ, நார்த்தாங்குடி வாய்க்கால் வாய்க்காலில் 4 கி.மீ, மாணிக்கமங்கலம் வாக்காலில் 6.5 கி.மீ மற்றும் மருதடி வாய்க்காலில் 3.5 கி.மீ தூரமும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் சாரு பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தூர் வாருவதற்கு நிதி ஒதுக்கீடு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 111 வேலைகள் எடுக்கப்பட்டு ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் தற்போது 40 சதவீத வேலைகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தூர்வாரும் பணியில் 45 பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மேலும் 100 நாள் வேலை திட்டத்தின் மூலமும் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த தூர் வாரும் பணிகள் அனைத்தும் விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார். ஆய்வின்போது தாசில்தார்கள் அன்பழகன் (வலங்கைமான்), குருநாதன் (குடவாசல்) உட்பட பலர் உடனிருந்தனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் 1000 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Tiruvarur ,Collector ,Charu ,Tiruvarur… ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி